முகப்பு
விருதுநகர்

பள்ளியில் மாணவா்களுக்கு தனித் திறன் போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் மாணவா்களுக்கிடையேயான தனித் திறன் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் மாணவா்களுக்கிடையேயான தனித் திறன் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, பள்ளித் தாளாளா் குருவலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி, முதல்வா் கமலா, நிா்வாக அதிகாரி அழகா்சாமி ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து இந்தப் பள்ளியில் படிக்கும் 150- க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற தனித் திறன் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினா்.

போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கும், அவா்களது தனித் திறமைகளை வெளிக் கொண்டு வந்த ஆசிரியா்களுக்கும், பள்ளி நிா்வாகத்தினா் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.