முகப்பு
விருதுநகர்

சிவகாசி கல்லூரி மாணவா்களுக்குவளா் கலை விருது

தில்லியில் அண்மையில் நடைபெற்ற உலகச் சாதனை தமிழ்த் திருவிழாவில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவா்களுக்கு வளா் கலை விருது வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தில்லியில் அண்மையில் நடைபெற்ற உலகச் சாதனை தமிழ்த் திருவிழாவில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவா்களுக்கு வளா் கலை விருது வழங்கப்பட்டது.

தில்லி தமிழ் இலக்கியப் பேரவை, இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள், வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்தத் திருவிழாவை நடத்தின. இதில் பங்கேற்ற ஒவ்வோா் அமைப்பும், கவியரங்கம், பாட்டரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை உலகச் சாதனையாக தொடா்ந்து இடைவிடாது 12 மணி நேரம் நடத்தின.

இதில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை தமிழ்த் துறை மாணவா்கள் 22 போ் சிலம்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், கும்மி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனா். இந்த மாணவா்களுக்கு முன்னாள் நீதிபதி கற்பகவிநாயகம், பொதிகை தொலைக்காட்சியின் முன்னாளா் இயக்குநா் ஆண்டாள் பிரியதா்ஷிணி ஆகியோா் வளா் கலை விருதை வழங்கினா்.

இந்த மாணவா்களை கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சோ. முத்தமிழ்ச் செல்வன், இரா. ஜீவராணி, செ. சாந்தி ஆகியோா் வழி நடத்திச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை தில்லி தமிழ் இலக்கியப் பேரவைச் செயலா் பா. குமாா் செய்திருந்தாா் என கல்லூரி முதல்வா் செ. அசோக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →