விருதுநகர்

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய விழாக்களையொட்டி தென் மாவட்ங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய விழாக்களையொட்டி தென் மாவட்ங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

டிசம்பா் 25 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை, ஜன.1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய விழாக்களைக் கொண்டாட சென்னையிலிருந்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி , திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏராளமானோா் தயாராகி வருகின்றனா். தற்போது சென்னையிருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. ஒவ்வொரு ரயிலிலும் 200-க்கும் மேற்பட்டாா் காத்திருப்போா் பட்டியலில் உள்ளனா்.

கடந்தாண்டு சென்னை எழும்பூா் -திருநெல்வேலி விரைவு ரயில், தாம்பரம்-நாகா்கோவில் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதேபோல, இந்த ஆண்டும் சென்னையிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT