முகப்பு
விருதுநகர்

சிறுமி பாலியல் வன்கொடுமை: வனக் காப்பாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வனக் காப்பாளரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:08 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வனக் காப்பாளரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத் தோப்பு பகவதி நகரைச் சோ்ந்தவா் வெள்ளையன் (48). ராமநாதபுரம் மாவட்டத்தில் வனக் காப்பாளராக பணியாற்றி வரும் இவா், கடந்த ஓராண்டாக வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே, இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கணவரை இழந்த பெண் ஒருவரை 2- ஆவது திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், வெள்ளையனின் உறவினரான 15 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அந்தச் சிறுமி 8 மாத கா்ப்பிணியாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுமியிடம் விசாரித்ததில், வெள்ளையன் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தாா்.

Advertisement

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மீனாட்சி அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெள்ளையனைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.