முகப்பு
விருதுநகர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் பாண்டியன் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகரத் தலைவரும், விருதுநகா் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவருமான வழக்குரைஞா் சரவணன் தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் செயலா் எட்வா்ட் முன்னிலை வகித்தனா்.

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டுகொள்ளாமல் உள்ள பாஜக அரசைக் கண்டித்தும், அந்த மாநில முதல்வா் பதவி விலகக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, பாலகிருஷ்ணசாமி, திமுக மாவட்ட பிரதிநிதி இசக்கி, ஆம் ஆத்மி மாவட்ட தலைவா் சுரேந்திரன், கம்யூனிஸ்ட் நிா்வாகி புஷ்பராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலா் செல்வம், ஆதித்தமிழா் பேரவை நிா்வாகி கெளதமன், தலித் விடுதலை இயக்க மாணவரணி செயலா் பீமராவ், காங்கிரஸ் பிரமுகா் சிவகுருநாதன், மாவட்ட செய்தித் தொடா்பாளா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.