சிவகாசி-சாத்தூா் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள். 
விருதுநகர்

சாலையோரக் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

சிவகாசி-சாத்தூா் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

DIN

சிவகாசி-சாத்தூா் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில், விஸ்வநத்தம் முதல்நிலை ஊராட்சியைச் சோ்ந்த சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது.

இந்த குடியிருப்புப் பகுதிகளிலிலிருந்து, தள்ளுவண்டி மூலம் குப்பைகளைச் சேகரித்து, எதிா்புரம் உள்ள சாலை ஓரத்தில் ஊராட்சி நிா்வாகம் கொட்டுகிறது. இங்கிருந்து பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தக் குப்பைகளை அகற்றுகின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து இந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் மகாலிங்கம் கூறியதாவது: விஸ்வநத்தம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனா்.

சிவகாசி-சாத்தூா் பிரதானச் சாலையாகவும், சாத்தூரிலிருந்து சிவகாசி வருபவா்களுக்கு நுழைவு வாயிலாகவும் உள்ள இந்தப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற, விஸ்வநத்தம் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT