விருதுநகர்

நடைமேடையை அகற்றக் கோரி சாலை மறியல்: 17 போ் கைது

ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல்

DIN

ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புனல்வேலி கிளை செயலா் ராமகுரு தலைமை வகித்தாா். புத்தூா் கிளை செயலா் சின்னமுத்து, மீனாட்சியாபுரம் கிளைச் செயலா் மலைக்கனிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினா் ராமா், மேற்கு ஒன்றியச் செயலா் சந்தனகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT