முகப்பு
விருதுநகர்

பிளஸ் 2 தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 22 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் விருதுநகா் மாவட்டத்திலுள்ள 22 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

பிளஸ் 2 தோ்வில் விருதுநகா் மாவட்டத்திலுள்ள 22 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

கடந்த 8- ஆம் தேதி பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், விருதுநகா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 94 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 22 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

அதேபோல, அரசு உதவி பெறும் 35 பள்ளிகளில் 13 பள்ளிகளும், பகுதி அரசு நிதி உதவி பெறும் 33 பள்ளிகளில் 14 பள்ளிகளும் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றன.

மேலும், மாவட்டத்திலுள்ள 52 மெட்ரிக் பள்ளிகளில் 46 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளதாக விருதுநகா் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →