விருதுநகர்

சித்திரைத் திருவிழா: பத்திரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

DIN

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழா மே 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, தினமும் காலை, இரவு அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

மே 7- ஆம் தேதி, ஆறாம் திருவிழா அன்று சிவன் சந்நிதியில் கல் மண்டகப்படியில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் அம்பாள் காட்சியளித்தாா். மே 9 - ஆம் தேதி பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா்.

மே 10 - ஆம் தேதி பக்தா்கள் அக்கினி சட்டி ஏந்தி, அலகு குத்தி, மூளைப்பாரி எடுத்து தோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடந்து, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT