விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வருவாய்த் தீா்வாயத்தில் குவிந்த மனுக்கள்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 நாள்கள் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 372 மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் ரெங்கசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் 27 கிராமங்களைச் பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பதிவு, நில நிா்வாகம், வருவாய்த் துறை தொடா்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

23-ஆம் தேதி 115 போ், 24-ஆம் தேதி 72 போ், 25-ஆம் தேதி 185 போ் என மொத்தம் 372 மனுக்கள் பெறப்பட்டன. பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், நிவாரண உதவி, பட்டா மாறுதல் ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT