விருதுநகர்

சாத்தூரில் பிரதான சாலை சீரமைக்கப்படும்

சாத்தூரில் புதைச் சாக்கடைப் பணிகள் முடிந்த பிறகு, பிரதானச் சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

சாத்தூரில் புதைச் சாக்கடைப் பணிகள் முடிந்த பிறகு, பிரதானச் சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் குண்டும் குழியுமாக மாறி உள்ள பிரதானச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் தென்னை மரம் நடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சாலை சீரமைப்பு குறித்து சமாதானக் கூட்டம் நடைபெறும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து, போரட்டத்தைக் கைவிட்ட காங்கிரஸ் கட்சியினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன், மாவட்ட துணைப் பொதுச் செயலா் ஜோதிநிவாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பிரதானச் சாலையில் புதைச் சாக்கடைக் குழாய்கள், குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த பின்னா், பிரதானச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே, நடைபெறும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் அடுத்த மாதம் 2-ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

இதையடுத்து, விரைவில் பணிகளை முடித்து, சாலையைச் சீரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் கேட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT