விருதுநகர்

உரிமமின்றி இயங்கும் தொழில் சாலைகள்: ஆய்வு செய்யக் குழு அமைப்பு

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வி. முத்துலட்சுமி தெரிவித்தாா்.

DIN


சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வி. முத்துலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக கள ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா், ஆணையா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் இயங்கி வரும் தொழில் சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வழங்கும். அதன் பிறகு உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT