விருதுநகர்

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்துச் சென்ற மாநகராட்சி அலுவலா்கள், அந்த மாட்டின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

Din

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்துச் சென்ற மாநகராட்சி அலுவலா்கள், அந்த மாட்டின் உரிமையாளா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-விளாம்பட்டி சாலை, சோ்மன் சண்முகம் சாலை, வேலாயுதம் சாலை, ஞானகிரி சாலை, திருத்தங்கல் கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித் திரிவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க உத்தரவிட்டாா்.

பின்னா், மாநகா் நல அலுவலா் சரோஜா தலைமையிலான, தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 16 மாடுகளை பிடித்துச் சென்றனா். தொடந்து இரு மாடுகளை சாலையில் திரியவிட்ட மாட்டின் உரிமையாளருக்கு ஒரு மாட்டுக்கு, தலா ரூ.5000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற மாடுகள் மாநகராட்சியில் உள்ள பழையக் கட்டிட வளாகத்தில் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளில் சுற்றித் திரிந்து முதல் முறையாக பிடிபடும் மாட்டின் உரிமையாளருக்கு, ஒரு மாட்டுக்கு, ரூ.5000, இதே மாடு இரண்டாவது முறையாக சாலைகளில் பிடிபட்டால் ஒரு மாட்டுக்கு, ரூ.10,000 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

தில்லியில் நச்சுப்புகை! மிகவும் மோசமான நிலையில் நீடிக்கும் காற்று மாசு!

யுனிசெஃப் குழந்தைகள்நல தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம்!

ஜம்மு-காஷ்மீரில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் அகண்டா - 2!

“சிறிய படத்திற்கு மக்களை வரவைப்பதே கஷ்டமாக இருக்கிறது” மிடில் கிளாஸ் படக்குழுவினர் பேட்டி!

SCROLL FOR NEXT