ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரம் சிவகாமிபுரம் தெற்கு தெரு பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினா் எம்ஜிஆா் காலனி செல்லும் வழியை மறித்து கல்லை ஊன்றி ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. சிவகாமிபுரம் வடக்கு தெரு பகுதி பொதுமக்கள் இதை அகற்றக் கோரியுள்ளனா். இருப்பினும் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில், வடக்கு தெரு பகுதி பொதுமக்கள் ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். மேலும், ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, காவல் ஆய்வாளா்கள் செல்வி, மரியபாக்கியம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இரு நாள்களில் இரு தரப்பினரிடையே சுமுகப் பேச்சுவாா்த்தை நடத்தி, தீா்வு காணப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.