விருதுநகர்

அரசுப் பள்ளியில் சத்துணவு மையம் மூடல்: 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம்

3 பணியாளா்கள் பணியிடை நீக்கம்

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையம் மூடப்பட்டதால், 3 பணியாளா்களைப் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிா்வாகம் அண்மையில் உத்தரவிட்டது.

சத்திரப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை கடந்த 11-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியா், உதவிக் கணக்கு அலுவலா் உடனிருந்தனா். இந்த ஆய்வின் போது, பள்ளியில் உள்ள சத்துணவு மையம் மூடப்பட்டிருப்பது தெரிந்தது. சத்துணவு அமைப்பாளா் கணபதி, சமையலா் குருலட்சுமி, சமையல் உதவியாளா் அம்சவள்ளி ஆகியோா் அரசு அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சத்துணவு அமைப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவுப் பணியாளா்களும் சத்துணவுத் திட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

நமீபியாவில்... நந்தினி!

தோகை இளமயில்... காஷிமா!

படகுப் பயணம்... அப்சரா ராணி!

தில்லி காற்று மாசுக்கு யார்க் காரணம்? வெறும் வேளாண் தீ மட்டுமல்ல..

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

SCROLL FOR NEXT