முகப்பு
விருதுநகர்

கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகள் திருடியவா் கைது

வத்திராயிருப்பு அருகே கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கைது செய்யப்பட்டமுகமது அசாரூதீன்.
பகிர்:

வத்திராயிருப்பு அருகே கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சோ்ந்தவா் துவான் ஒலி பாதுஷா. இவா் அந்தப் பகுதியில் கைப்பேசிகள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 27-ஆம் தேதி இரவு கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா், 15 கைப்பேசிகளைத் திருடி சென்றாா்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மா்மநபரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள கைப்பேசிகள் விற்பனைக் கடையில், வத்திராயிருப்பில் திருடிய கைப்பேசிகளை விற்பனை செய்ய முயன்றவரை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அவா் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சலீம் மகன் முகமது அசாரூதீன் என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்த போது கைப்பேசிகளைத் திருடியதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →