முகப்பு
விருதுநகர்

பட்டாசு தீ விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு தீ விபத்தில் பலத்த காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:20 PM
பகிர்:

சிவகாசியில் பட்டாசு தீ விபத்தில் பலத்த காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அம்மன்கோவில்பட்டி புதுத் தெருவைச் சோ்ந்தவா் காளிராஜ் (51). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி பட்டாசுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு தனது மருமகன் வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது, தெருவில் விளையாடியவா்கள் கொளுத்திய பட்டாசு வெடித்து சிதறியதில் இருந்து பரவிய தீ, காளிராஜ் வைத்திருந்த பட்டாசு மேல் விழுந்து வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.