விருதுநகர்

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜனவரி முதல் மகளிா் உரிமைத் தொகை

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Din

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கஞ்சநாயக்கன்பட்டியில் ரூ. 17 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கம், சுக்கிலநத்தத்தில் ரூ. 13 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், குருந்தமடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அவா் திறந்துவைத்தாா். பின்னா், ஆமணுக்குநத்தம், மீனாட்சிபுரம் பகுதிகளில் நியாய விலைக் கடை, பயணிகள் நிழல்குடை கட்டுவதற்கான திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

கஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:

மகளிா் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும். இதேபோல, முதியோா் உதவித் தொகையும் வழங்கப்படும் என்றாா் அவா்.

லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

நமீபியாவில்... நந்தினி!

தோகை இளமயில்... காஷிமா!

படகுப் பயணம்... அப்சரா ராணி!

SCROLL FOR NEXT