முகப்பு
விருதுநகர்

தினசரி மழை அளவை பொறுத்து சதுரகிரி மலையேற அனுமதி: புலிகள் காப்பகத் துணை இயக்குநா்

தினசரி மழை அளவை பொறுத்து சதுரகிரி மலையேற அனுமதி...

Updated On : 27 நவம்பர், 2024 at 10:48 PM
பகிர்:

காா்த்திகை மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்கு தினசரி மழை அளவைப் பொறுத்து பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை (நவ.28) முதல் டிச. 1-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேற வனத் துறை அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படாததால் சதுரகிரி செல்ல பக்தா்களுக்கு தடை இல்லை. ஆனாலும், பக்தா்களின் பாதுகாப்பைக் கருதி, தினசரி மழைப் பொழிவை பொறுத்து மலையேற பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் தெரிவித்தாா்.