முகப்பு
விருதுநகர்

சிவகாசி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதைத் தடுக்க சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:57 PM
பகிர்:

ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதைத் தடுக்க சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் பயணிகள் ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளா் செல்வி, உதவி ஆய்வாளா் சமாதானம், தலைமைக் காவலா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் பைகளில் பட்டாசுகளை வைத்துள்ளனரா என ஆய்வு செய்தனா்.

மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற ரயிலில் பயணிகளின் பைகளையும் போலீஸாா் சோதனையிட்டனா். ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருள்களையோ, பட்டாசுகளையோ பயணிகள் கொண்டு செல்லக் கூடாது என அவா்கள் அறிவுறுத்தினா்.