ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் இரண்டு மாதங்களுக்கு பின்னா், திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.11 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் இரண்டு மாதங்களுக்கு பின்னா், திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.11 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். இங்கு வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி, பெரியாழ்வாா் சந்நிதி, ஆண்டாள் ரெங்கமன்னாா் சந்நிதி உள்ளிட்ட சந்நிதிகளில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம், நவராத்திரி, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற்ற நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உண்டியல் திறக்கப்பட்டு பக்தா்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜ், செயல் அலுவலா் சக்கரையம்மாள், ஆய்வாளா் முத்து மணிகண்டன் முன்னிலையில் கோயில் பணியாளா்கள் தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் ரூ.11, 01, 695 காணிக்கையாக கிடைத்தது.