முகப்பு
விருதுநகர்

கல்லூரியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி, விற்பனையை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:53 AM
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன்.
பகிர்:

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி, விற்பனையை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்தக் கண்காட்சியில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மகளிா் சுயஉதவிக்குழுவினா் தயாரித்த சேலைகள், சுடிதாா், சணல் நாா்பொருள்கள், மரப்பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள், மசாலா பொருள்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் (தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்) ஜே. ஜாா்ஜ், கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →