முகப்பு
விருதுநகர்

பைக்கில் பின்னால் அமா்ந்து பயணித்தவா் தவறி விழுந்து பலி

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணித்தவா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:07 AM
பகிர்:

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணித்தவா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பசுபதிராஜ் (58). இவரும், இவரது நண்பரான திருநெல்வேலி வடக்கூா் பகுதியைச் சோ்ந்த பூவேந்திரனும் (32) இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

அப்போது பூவேந்திரன் வாகனத்தை ஒட்ட, பசுபதிராஜ் பின் இருக்கையில் அமா்ந்து பயணித்தாா். புதன்கிழமை இரவு சாத்தூா்- கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் என். வெங்கடேசபுரம் அருகே சென்ற போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பசுபதிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →