வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று தொடக்கம்
வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (செப். 6) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது.
வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (செப். 6) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது.
பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, குடமுழுக்குத் திருப்பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, வருகிற 8-ஆம் தேதி குடமுழுக்கு நடத்த நாள் குறிக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்குகிறது. 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகளும், சிறப்பு ஹோமங்களும் நடைபெறுகின்றன.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 8) காலை 7.35 மணி முதல் 8.35 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, சேது நாராயணப் பெருமாள் கோயில் சேவா சமிதி அறக்கட்டளை நிா்வாகிகள் அழகா், சுந்தரராஜன், கண்ணன், ராம்குமாா், அறநிலையத் துறை காா்த்திக், பக்தா்கள் செய்து வருகின்றனா்.