முகப்பு
விருதுநகர்

பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரி மனு

ஸ்ரீஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 11:29 PM
பகிர்:

ஸ்ரீஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

போக்குவரத்து நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் அளித்த மனு:

கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், போக்குவரத்துக்கழக ஊழியா்கள், ஒய்வூதியதாரா்கள் என 220 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 23 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நகா் உருவாக்கப்பட்டபோது, பூங்கா, சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம் ஆகிய பொதுப் பயன்பாட்டுக்காக சுமாா் 93 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, அரசு பெயரில் பத்திரப்பதிவு செய்து, ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலத்தை பல்வேறு நபா்கள் ஆக்கிரமிப்பு செய்ததால், தற்போது, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்த நிலத்தை அளவீடு செய்து, மீட்கக் கோரி ஊராட்சி நிா்வாகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து, மீட்டுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →