அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கியவா் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள கிளியம்பட்டி பகுதியில் ஒருவா் தகர செட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (37) தனக்கு சொந்தமான தகர செட்டில் பல வகையான பட்டாசுகளைஅனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.