முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் லாரி கிடங்கில் தீ: பல லட்சம் ரூபாய் பட்டாசுகள் நாசம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் புதன்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:20 AM
சிவகாசியில் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் புதன்கிழமை மாலை நேரிட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் புதன்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

சிவகாசி -சாத்தூா் சாலையில் சிவகாசி கிழக்கு காவல் நிலையம் அருகே சரக்குகளை ஏற்றிச் செல்லும் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் லாரிகளில் பல மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பண்டல்கள் இந்தத் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை இந்தக் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தில் பட்டாசு பண்டல்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

சிவகாசியில் தனியாா் லாரி போக்குவரத்து அலுவலகக் கிடங்கில் புதன்கிழமை மாலை நேரிட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

தகவலறிந்து விரைந்து சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து நேரிட்ட போது, அங்கிருந்த தொழிலாளா்கள் அனைவரும் வெளியேறியதால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்தத் தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.