ராஜபாளையத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளதா என வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன். 
விருதுநகர்

ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், தொழிலாளா் நலத்துறை அலுவலா்களால் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டிருக்கிா என ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, தமிழில் பெயா் பலகை வைக்காத 28 நிறுவனங்களுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.56,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மைவிழி செல்வி, தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் பிச்சைக்கனி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

நமீபியாவில்... நந்தினி!

தோகை இளமயில்... காஷிமா!

படகுப் பயணம்... அப்சரா ராணி!

SCROLL FOR NEXT