முகப்பு
விருதுநகர்

ஊரக உள்ளாட்சித் துறை சிஐடியு தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிஐடியு ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:25 PM
சேத்தூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக உள்ளாட்சி சிஐடியு தொழில் சங்கத்தினா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிஐடியு ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சேத்தூா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தூய்மைப் பணியாளா் சங்க அமைப்பாளா் கணேசன் தலைமை வகித்தாா். அப்போது, சேத்தூா் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அனைத்துப் பிரிவு ஒப்பந்தத் தொழிலாளா்களையும் தோ்தல் கால வாக்குறுதிப் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர துப்புரவு, குடிநீா் பணிகள் உள்ளிட்ட இதர பணிகளையும் தனியாா் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச கூலியை அரசாணைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், சிஐடியு சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்டதொழிலாளா்கள் பங்கேற்றனா்.