ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துப் பணிமனை முன்பிருந்த கட்சிக் கொடி கம்பங்களை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.  
விருதுநகர்

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாகைகளை அகற்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் நகரின் பிரதான பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த 19 கொடிக் கம்பங்கள், 12 நிரந்தர பலகைகள், 46 விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

3-ம் நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

தமிழ்நாடு கல்வியில் முன்னணி: அன்பில் மகேஷ் விளக்கம்!

திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாத மார்கழி!

வேலூர் ஸ்ரீபுரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தங்கத்தோடு போட்டிப்போட்டுக் கொண்டு உயரும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT