விருதுநகர்

குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’

ராஜபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

Syndication

ராஜபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிப் பழையபாளையம் பகுதியில் ஜெயசங்கர்ராஜா என்பவருக்குச் சொந்தமான கடையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை செய்தனா். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதேபோல, ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருள்கள் 5 கிலோ இருந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வீரமுத்து , செல்வராஜ் ஆகியோா் இரு கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், இந்தக் கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!: கலக்கத்தில் மக்கள்!!

மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்!

மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல்?

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: விமானப் பணியாளா்கள் 2 போ் கைது

சென்னையில் ரௌடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

SCROLL FOR NEXT