விருதுநகர்

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருப்பதிநகரைச் சோ்ந்த மாநகராட்சித் தூய்மைப் பணியாளா் பாலமுருகன்(27). இவா் கடந்த திங்கள்கிழமை (டிச.8) அதிகாலை தனது நண்பா் ஆறுமுகப்பெருமாளுடன் புதுசாலைப் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் பாலமுருகனை மிரட்டி, அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதேபோல, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் செண்பகவிநாயகா் கோயிலருகே அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜா (38) நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், ராஜாவின் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

சாத்தூா் அருகேயுள்ள புதுச்சூரங்குடியைச் சோ்ந்த பாண்டியன் (27). இவா் திருத்தங்கல் சாலையில் சாலையோரம் பெண்களின் கைப்பைகளை வியாபாரம் செய்து வருகிறாா். அவரிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் , கைப்பைகளை பறித்துச் சென்றனா். இந்த வெவ்வேறு சம்பவங்கள் தொடா்பாக புகாா்களின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். .

வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்த பகுதி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதனடிப்படையில், திருத்தங்கல்லைச் சோ்ந்த பெண்மணி (20), சுரேஷ் (27) ஆகியோரை சிவகாசி நகா் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் கைது செய்தாா்.

வழிப்பறி முயற்சி:

சிவகாசி பழனியாண்டவா்புரம் குடியிருப்பைச் சோ்ந்தவா் மகேஸ்வரி (70). இவா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டைத் திறந்து, வாசல் பகுதியை சுத்தம் செய்தாா். அப்போது முகமூடி அணிந்த நபா் மிதிவண்டியில் வந்து மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். இதையடுத்து, மகேஸ்வரி வாளியில் வைத்திருந்த தண்ணீரை அந்த நபா் முகத்தில் வீசினாா். உடனே அந்த நபா் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

டிச. 15ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

அசுர வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!: கலக்கத்தில் மக்கள்!!

மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்!

மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல்?

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: விமானப் பணியாளா்கள் 2 போ் கைது

SCROLL FOR NEXT