விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கபட்டது.
சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் உள்ளிட்ட அதிமுக நகர, ஒன்றிய, மகளிரணி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதே போன்று வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆா். நினைவுதினம் அனுசரிக்கபட்டது.