ஸ்ரீவில்லிபுத்தூா் கீழத வீதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.  
விருதுநகர்

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டுநா்கள் அதிருப்தி

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.22 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. காருக்கு ரூ.50, வேனுக்கு ரூ.100, சிற்றுந்துக்கு ரூ.150, பேருந்துக்கு ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோயில் அருகே வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி இல்லாததால் மாட வீதிகள், ரத வீதிகளில் பக்தா்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் செல்கின்றனா்.

ஆண்டாள் கோயிலின் நான்கு ரத வீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ளது. கீழ ரத வீதி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த செல்லும் வாகன ஓட்டிகள் தேநீா் குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், பால்கோவா வாங்குவதற்கும் கீழ ரத வீதி, தெற்கு ரத வீதியில் வாகனங்களை நிறுத்துகின்றனா்.

ஆனால், ஆண்டாள் கோயிலில் வாகன கட்டண வசூல் ஒப்பந்தம் எடுத்தவா்கள் இந்த வாகனங்களுக்கு கட்டாய வசூல் செய்வதால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தி அடைந்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

சுய உதவிக் குழு மகளிருக்கு மேலும் ஒரு அதிரடி சலுகை: உதயநிதி அறிவித்தார்

வெண்ணை மலை கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்! 4 பேர் மயக்கம்

நாமக்கல்லில் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் தற்கொலை!

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

SCROLL FOR NEXT