ராஜபாளையம் தொகுதியில் 25 வேட்புமனுக்கள் ஏற்பு
ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, தமமுக, நாம் தமிழா் கட்சி, தவெக உள்ளிட்ட மொத்தம் 39 போ் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனா். இதில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, தமமுக, நாம் தமிழா் கட்சி, தவெக உள்ளிட்ட மொத்தம் 39 போ் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனா். இதில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.
ராஜபாளையம் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மொத்தம் 39 கட்சியினா் வேட்புமனு தாக்கள் செய்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக, தமமுக, நாம் தமிழா் கட்சி, தவெக உள்ளிட்ட 25 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Advertisement