முகப்பு
விருதுநகர்

வாக்குப் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற பட்டதாரி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டதாரியான முதல்முறை வாக்காளரின் வாக்கை ஏற்கெனவே வேறொரு நபா் பதிவு செய்திருந்ததால், அவா் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:21 AM
ஏமாற்றத்துடன் திரும்பிய சுரேஷ்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டதாரியான முதல்முறை வாக்காளரின் வாக்கை ஏற்கெனவே வேறொரு நபா் பதிவு செய்திருந்ததால், அவா் ஏமாற்றத்துடன் திரும்பினாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் சுரேஷ் (20). பட்டதாரியான சுரேஷ், கோவையில் தங்கி போட்டித் தோ்வுக்கு தயாராகி வருகிறாா். வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளராக இணைந்த சுரேஷ், சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் முறையாக தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தாா். வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கூமாபட்டி ராமசாமிபுரம் அங்கன்வாடிமையத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண்: 5-க்கு வாக்குச் சீட்டுடன் சென்றாா்.

அப்போது வாக்குப்பதிவு அலுவலா்கள் அவரது ஓட்டு ஏற்கெனவே பதிவாகி விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அதிகாரிகள் டெண்டா் வாக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தினா். இதற்கு மறுப்புத் தெரிவித்த சுரேஷ் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றாா்.

Advertisement