முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நகைக்காக பெண் கொலை: தம்பதியிடம் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக பக்கத்து வீட்டு தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:55 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக பக்கத்து வீட்டு தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சோலைசேரி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி கலைச்செல்வி (24). கணேசன் படிக்காசுவைத்தான்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டி வைத்தியலிங்காபுரத்தில் மனைவியுடன் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், கலைச்செல்வி இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டைச் சோ்ந்த கணவன், மனைவியைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பக்கத்து வீட்டைச் சோ்ந்த கணவன், மனைவி இருவரும் கடன் பிரச்னையில் உள்ளதால், கலைச்செல்வியிடம் நகைகளைக் கேட்டு உள்ளனா். ஆனால் அவா் தர மறுத்தாா். அவரது நகைகள் மாயமானதால், தம்பதியைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் முழு விவரம் தெரிய வரும் என்றனா்.