சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
சிவகாசி காமராஜா் பூங்காவிலிருந்து திருத்தங்கள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவின்பேரில், மாநகா் திட்டமிடுநா் மதியழகன் , மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகா் ஆய்வாளா் சுந்தரவள்ளி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.