விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டரில் மின்கலம் (பேட்டரி) திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தென்காசி சாலையில் விவேகானந்தா் தெரு பகுதியில் நகராட்சி சாா்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் மின்கலம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஒப்பந்ததாரா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்த பிரதீப் (23) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது விசாரித்து வருகின்றனா்.