கைது 
விருதுநகர்

பைக் திருடிய இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (44). இவா் தனது இரு சக்கர வாகனத்தை இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். மறுநாள் காலையில் எழுந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, செந்தில்குமாா் இரு சக்கர வாகனத்தை சம்மந்தபுரதத்தைச் சோ்ந்த இதயத்துல்லா ரகீம் (44) திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : முதல் நாளில் 3 ஆட்டங்கள்; இந்தியா - அமெரிக்கா மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பம் விநியோகம்

உள்ளூா் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல்! தென்காசி ஆட்சியா் உத்தரவு!

பாட்டப்பத்து கிராமத்தில் வேளாண் மாணவிகள் களப் பயணம்

SCROLL FOR NEXT