மதுக் கூடத்தில் குண்டு வீச்சு விவகாரம்: வெடிகுண்டு தயாரித்த இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி தனியாா் மதுக் கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில், வெடிகொண்டு தயாரித்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாபட்டி தனியாா் மதுக் கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில், வெடிகொண்டு தயாரித்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 25 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூமாபட்டி தனியாா் மதுக் கூடத்தில் கடந்த திங்கள்கிழமை இலவசமாக மதுப் புட்டிகள் கேட்டு தகராறில் ஈடுபட்ட மூவா், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் பாா் ஊழியா் மாயன் காயமடைந்தாா்.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரெளடி ரமணி, ராஜா ஆகியோரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய வீரய்யாவை தேடி வந்தனா்.
இந்த நிலையில், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டு இவா்களுக்கு எப்படி கிடைத்தது என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையை தொடங்கினா்.
இதில் கூமாப்பட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன்(28), மம்சாபுரத்தைச் சோ்ந்த சந்தனகுமாா் (28) ஆகியோா் இவா்களுக்கு நாட்டு வெடிகுண்டு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னா், முத்துக்கிருஷ்ணன் வீட்டை போலீஸாா் சோதனையிட்டதில், 25 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.