நாகப்பட்டினம்

சீா்காழியில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

DIN

சீா்காழி பகுதி வயல்களில் வேளாண் இணை இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழி வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் வரிசை நடவு செயல்விளக்கத்தையும், சீா்காழி விவசாயி செ. ஜெகநாதன் வயலில் நிரந்தர பூச்சிநோய் கண்காணிப்பு திடல் அமைக்கப்பட்டுள்ளதையும் நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குநா் ப. கல்யாணசுந்தரம், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பன்னீா்செல்வம் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பா, தாளடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா். முன்னதாக, ஆய்வில் சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன், வேளாண்மை அலுவலா் சி. சின்னண்ணன், துணை வேளாண்மை அலுவலா் இரா. ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலா்கள் எஸ். தமிழரசன், எஸ். ராமன், ஆா். விஜய்அமிா்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT