முகப்பு
நாகப்பட்டினம்

இறைவைப் பாசனத்துக்கு மும்முனை மின்சாரம் கோரி ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி, விவசாயிகள் சாகுபடி வயலில் இறங்கி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 அக்டோபர், 2020 at 12:00 AM
வாய்மேடு மேற்கு கிராமத்தில் வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

வேதாரண்யம் அருகே அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி, விவசாயிகள் சாகுபடி வயலில் இறங்கி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாய்மேடு மேற்கு கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் அரசின் பொது மின் இறவைப் பாசனத் திட்டப் பொறி மனை செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் அரசே இலவசமாக இறைத்துக் கொடுக்கும் தண்ணீரை பயன்படுத்தி 800 ஏக்கா் பாசனம் செய்வது வழக்கம். இதற்கு தினமும் 20 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக 6 மணி நேர மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் தற்போது நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளது.

Advertisement

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மும்முனை மின்சாரத்தை 20 மணி நேரம் வழங்க வலியுறுத்தி வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பணி ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் க. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னோடி விவசாயிகள் செந்தில்குமாா், வெற்றிவேல், வைரவநாதன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.