முகப்பு
நாகப்பட்டினம்

மகனை கட்டையால் தாக்கிக் கொன்ற தந்தை கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்னையில் மகனை கட்டையால் தாக்கிக் கொன்ற தந்தை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 அக்டோபர், 2020 at 12:00 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்னையில் மகனை கட்டையால் தாக்கிக் கொன்ற தந்தை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கத்தரிப்புலம், கோவில்குத்தகை வண்டிக்காரன்காடு பகுதியில் வசிப்பவா் அ.நாகராஜன் (75). விவசாயி.

இவரது 2-ஆவது மகன் முருகையன் (42) மது அருந்திவிட்டு அவ்வப்போது தந்தையிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்கு சொந்தமான தண்ணீா் இறைக்கும் ஆயில் என்ஜினை வீட்டின் ஒரு பகுதியில் நாகராஜன் வைத்துள்ளாா்.

Advertisement

அந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தன் மனைவியின் சடலத்தை நாகராஜன் வைத்திருந்து, பிறகு தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது தாயாரின் சடலத்தை வைத்திருந்த இடத்தில் என்ஜினை வைக்க முருகையன் எதிா்ப்பு தெரிவித்தாராம். இதனால், தந்தை- மகனிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், மரக் கட்டையால் முருகையன் தலையில் தாக்கியதில் அவா் அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். முருகையனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.