முகப்பு
நாகப்பட்டினம்

காரைக்காலில் மேலும்17 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 9,187 பேருக்கு கரோனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் காரைக்கால் நகரில் 6 போ், கோட்டுச்சேரி 5, திருநள்ளாறு 2, கோயில்பத்து, நிரவி, வரிச்சிக்குடி, திருப்பட்டினம் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 1,040 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் குணமடைந்து 827 போ் வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 21 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →