முகப்பு
நாகப்பட்டினம்

சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதி: ஆட்சியரிடம் கோரிக்கை

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் சுருக்குவலை தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 8 செப்டம்பர், 2020 at 12:43 AM
பகிர்:

காரைக்கால்: சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் சுருக்குவலை தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூா், காளிக்குப்பம், அக்கம்பேட்டை, காசாக்குடிமேடு, காரைக்கால்மேடு, பட்டினச்சேரி வரை சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், சுருக்கு வலையின் மூலம் மீன்பிடி தொழில் செய்துவருகிறோம்.

மாா்ச் மாதம் முதல் கரோனா பரவலால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியவில்லை. கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அனைத்து படகுகளும் மீன்பிடிப்புக்கு சென்றன. ஆனால், சுருக்கு வலை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடக்கூடாது என காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா் தெரிவித்தனா்.

Advertisement

இதனால் சுருக்கு வலையை பயன்படுத்தி தொழில் செய்துவரும் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, சுருக்கு வலையை பயன்படுத்தி தொழில் செய்ய ஏதுவாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.