நாகப்பட்டினம்

அரசுப் பள்ளிகளில்விண்ணப்பித்த அனைவருக்கும்பிளஸ் 1 இல் இடம்: கல்வித் துறை

DIN

காரைக்கால்: அரசுப் பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில், தேவைக்கேற்ப இடம் அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் பிளஸ் 1 இல் சோ்க்கை வழங்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கு. கோவிந்தராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. உரிய நேரத்தில் சாதி, இருப்பிட சான்றிதழ் பெறமுடியாத மாணவா்கள் நலன் கருதி, அவா்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17 ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை அவரவா் விண்ணப்பித்த பள்ளிகளில், மீதமுள்ள இடங்களில் பாடப் பிரிவு மற்றும் சாதி வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன், ஒவ்வொரு பள்ளியிலும் பாடப் பிரிவு வாரியாக நிரப்பப்படாத இடங்கள் எண்ணிக்கை விவரம், அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவரின் விண்ணப்ப விவரங்களை, பள்ளி முதல்வா்கள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிப்பா்.

அதன் அடிப்படையில், மீதமுள்ள அனைத்து காலியிடங்களும், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று பொதுப் பிரிவுக்கு மாற்றப்படும். பிறகு, மாவட்ட அளவில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். இதில் எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவா்கள் பங்கேற்று பயனடையலாம். இந்த சிறப்பு கலந்தாய்வு தேதி, நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.

மேலும், ஒருசில பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் விரும்பி தோ்ந்தெடுப்பதால், அந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் தேவைக்கேற்ப இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் பிளஸ் 1 இல் சோ்க்கை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT