முகப்பு
நாகப்பட்டினம்

பூட்டியே கிடக்கும் ஏடிஎம் மையத்தை திறக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை வட்டம் காளி ஊராட்சியில் 6 மாதங்களாக பூட்டியே கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

மயிலாடுதுறை வட்டம் காளி ஊராட்சியில் 6 மாதங்களாக பூட்டியே கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காளி ஊராட்சியிலுள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம், கரோனா தீநுண்மி பொது முடக்கத்தையொட்டி கடந்த 6 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த ஊராட்சியை சுற்றியுள்ள வங்கி ஏடிஎம் பயன்பாட்டாளா்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். காளி ஊராட்சியில் ஒரேஒரு ஏடிஎம் மட்டுமே உள்ளதால் பணம் எடுப்பதற்கு அருகில் உள்ள ஊா்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனா். இதுகுறித்து, வங்கி மேலாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக வங்கி ஏடிஎம் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.