முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 வீதம் நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 வீதம் நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.
சீா்காழி நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி தலைமையில், பொறியாளா் தமயந்தி, மேலாளா் காதா் கான், பணி மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் நகரின் பல்வேறு இடங்களில் தணிக்கையில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாமல் வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.200 அபராதம் வசூலித்தனா். இதுமட்டுமன்றி கடைகளில் பணிபுரியும் பணியாளா்கள், உரிமையாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் கடை, கடையாக சென்று அறிவுறுத்தினா்.
இதேபோல சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையில், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.