மயிலாடுதுறை ரயில் நிலையத்தில்145 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் 145-ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் 145-ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தில் சென்னையில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு ரயில்வே இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை-தஞ்சாவூா் பாதை அமைக்கும் பணி 1877-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முடிவடைந்து, ரயில்கள் இயக்கம் தொடங்கியது.
தற்போது, இப்பாதையில் ரயில் சேவை தொடங்கிய 145 ஆவது ஆண்டை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடையில் மயிலாடுதுறை மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் சாா்பில் சங்கத் தலைவா் கணேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சங்க செயலாளா் குமாா், பொருளாளா் வழக்குரைஞா் சௌ.சிவச்சந்திரன், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.